Skip to main content

கோடை மழையால் நடவு பணியில் விவசாயிகள்


தர்மபுரி, மே 6
கோடை மழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது பயிர்களை நடவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு பருவ மழை ஏமாற்றியதால், விவசாயம் மட்டுமின்றி, குடிநீருக்காகவும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

 கடந்த சில தினங்களுக்கு முன், தர்மபுரி மாவட்டத்தில் கோடை மழை பெய்தது. வழக்கம் போல் இந்தாண்டும், கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவ மழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில், தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், சமீபத்தில் பெய்த கோடை மழையை நம்பி, கோடை உழவு செய்ததுடன், பயிர்களை நடவு செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில், வெப்ப சலனத்தால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், கோடை உழவில் விதைத்த சோளம் உள்ளிட்ட பயிர்கள், தற்போது முளைத்து பசுமையாக உள்ளது. 

கடந்தாண்டு போல் இல்லாமல், இந்தாண்டு சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காக்க மட்டுமின்றி, நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் வகையில், பருவமழை பெய்யும் என, விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நம்பிக்கை பிறந்துள்ளது.

Comments

Popular posts from this blog

அக்ரி-டாக்டர் மின் நாளிதழ்

https://agridoctor.in/?p=15  

பருத்தி வயலில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

திருவாரூர், ஏப்.25 திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள ராதாநல்லூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி வயிலில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் மு. ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். தற்போது, பருத்தி வயலில் அசுவிணி மற்றும் இலைப்பேன் தாக்குதலின் அறிகுறிகள் தென்படுகிறது. அசுவிணியின் தாக்குதலால் இலை ஓரங்கள் கீழ்நோக்கி சுருண்டு கீழ்நோக்கிய கிண்ணம் போன்று காணப்படும். இலைப்பேன் தாக்குதலால் இலைகளின் அடிப்பாகத்தில் மிக நுண்ணிய வெண் புள்ளிகளும், சேதம் மிக அதிகமாக உள்ளபோது இலைகள் மொரமொரப்பாகவும், மேல் நோக்கி வளைந்தும் காணப்படும். ஒருங்கிணைந்த முறைகளில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: மக்காச் சோளத்தை பருத்தி வயலை சுற்றி பயிரிடும் போது சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு தடுப்புப் பயிராக இருக்கும். வயல் வரப்புகளில் தட்டைப் பயரை ஓரப்பயிராகப் பயிரிட்டு நன்மை செய்யும் பொறிவண்டு, கிரைசோபிட் உள்ளிட்ட பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப

தென்னையில் குருத்தழுகல் நோய்

     தென்னையில் குருத்தழுகல் நோய்