Skip to main content

Posts

Showing posts from April, 2019

கோடை மழையில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து மண் வளத்தைப் பாதுகாக்கலாம் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் தகவல்

தர்மபுரி, ஏப்.25 கோடை மழையைப் பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மண் வளத்தைப் பாதுகாக்க இயலும் என்று தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பா.ச.சண்முகம், முனைவர் ம.சங்கீதா ஆகியோர் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் விவசாயிகளுக்கு கூறிய ஆலோசனையில்: விவசாயிகள் தற்போது கிடைக்கப்பெற்ற கோடை மழையைப் பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் அடுத்து ஆனி மற்றும் ஆடி மாதங்களில் சாகுபடி செய்யக்கூடிய பயிருக்குத் தேவையான இயற்கை உரங்களை எளிதில் பயிருக்கு அளிப்பதுடன், மண்வளத்தையும் பாதுகாக்க இயலும். தற்போது, தரிசாக உள்ள நிலங்களில் பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு அல்லது பயறு வகைப் பயிர்களை குறிப்பாக காராமணி ஆகியவற்றை ஏக்கருக்கு 20 கிலோ என்றளவில் விதைத்து, பூ பூக்கும் பருவம் வரை வளரவிட்டு, அந்த நிலத்திலேயே மண்ணில் ஈரம் இருக்கும் போது மடக்கி உழுதுவிட வேண்டும். அவ்வாறு செய்வதால் பசுந்தாள் உரப் பயிர்கள் மண்ணில் நுண்ணுயிர்களின் உதவியுடன் சிதைக்கப்பட்டு, அவற்றிலிருந்து ஹீயுமஸ் எனப்படும் மக்குப் பொருள், பேரூட்டங்க

பருத்தி வயலில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

திருவாரூர், ஏப்.25 திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள ராதாநல்லூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி வயிலில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் மு. ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். தற்போது, பருத்தி வயலில் அசுவிணி மற்றும் இலைப்பேன் தாக்குதலின் அறிகுறிகள் தென்படுகிறது. அசுவிணியின் தாக்குதலால் இலை ஓரங்கள் கீழ்நோக்கி சுருண்டு கீழ்நோக்கிய கிண்ணம் போன்று காணப்படும். இலைப்பேன் தாக்குதலால் இலைகளின் அடிப்பாகத்தில் மிக நுண்ணிய வெண் புள்ளிகளும், சேதம் மிக அதிகமாக உள்ளபோது இலைகள் மொரமொரப்பாகவும், மேல் நோக்கி வளைந்தும் காணப்படும். ஒருங்கிணைந்த முறைகளில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: மக்காச் சோளத்தை பருத்தி வயலை சுற்றி பயிரிடும் போது சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு தடுப்புப் பயிராக இருக்கும். வயல் வரப்புகளில் தட்டைப் பயரை ஓரப்பயிராகப் பயிரிட்டு நன்மை செய்யும் பொறிவண்டு, கிரைசோபிட் உள்ளிட்ட பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப

டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம்

ஷாங்காய், ஏப்.22 ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் ஐடி.ரூம்ஸ் என்ற பெயரிலான இந்த கான்செப்ட் மாடல் 2021ம் ஆண்டு தயாரிப்பு நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஃபுல்சைஸ் எனப்படும் முழு அளவிலான பிரம்மாண்ட எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது. இந்த கார் 5 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், 7 பேர் பயணிக்கும் வகையில் மிகச் சிறப்பான இருக்கை வசதி அமைப்புடன் வர இருக்கிறது. மேலும், இருக்கை அமைப்பை தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் வசதியை அளிக்கும். பேட்டரியில் இயங்கும் இந்த எஸ்யூவி மாடலில் திறன் வாய்ந்த மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும். அடுத்து, இந்த காரில் லெவல்-4 தானியங்கி டிரைவிங் தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட இருக்கிறது. இது தானியங்கி கார் மாடலாக இருப்பதால், ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட பல பாகங்கள் மின்னணு தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, தொடு உணர் பொத்தான் மூலமாக கட்டுப்படுத்தும் வசதியை பெற்றிருக்கும். இந்த காரில்

மழை வாய்ப்பால் ஏரி, குளங்களை கண்காணிக்க கோரிக்கை,

கரூர், ஏப்.18 பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கிய நிலையில், மழைக்கு வாய்ப்புள்ளதால், மாணவ, மாணவியரின் உயிரிழப்பை தடுக்க, தண்ணீர் நிரம்பியுள்ள குளம், குட்டைகள், ஏரிகள், கற்கள் தோண்டப்பட்ட குவாரிகள் மற்றும் மணல் குவாரிகளை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி, கடவூர், தரகம்பட்டி, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில், கல் குவாரிகள் அதிகம் செயல்படுகின்றன.  இவை தவிர பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில், கற்களை வெட்டி எடுக்க தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இவை தவிர, கிராம பஞ்சாயத்துகளில் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில், பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய இடங்களில், போதுமான பாதுகாப்பு உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில், அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், மாணவ, மாணவியர் ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்க, மீன் பிடிக்கவும், குளிக்கவும் ஆர்வத்துடன் செல்வர். எனவே பெற்றோர்கள் தக்க அறிவுரைகளை வழங்கி தங்களது குழந்த

அசைபோடும் கால்நடைகளுக்கு அமில மிகை நோய் கட்டுப்படுத்த அறிவுரை,

நாமக்கல், ஏப்.18 அசைபோடும் கால்நடைகளில் அமில மிகை நோய் தாக்கத்தால், இறப்பு ஏற்பட்டு, விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. அவற்றை தடுக்க தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மேலும் அவர் கூறியாவது: அனைத்து வகை அசைபோடும் பிராணிகளும் (வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு மற்றும் எருமை இனங்கள்) எளிதில் செரிமானமாகக் கூடிய மாவு சத்து நிறைந்த உணவுப்பொருள்களான அரிசி, கோதுமை, அடுமனை உபரிப் பொருள்கள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை அளவிற்கு அதிகமாக அளிக்கும்போது, அமில மிகை நோயால் பாதிக்கப்படுகின்றன. பிராணிகள் இறக்கவும் வாய்ப்புள்ளது. அமில மிகை நோய் என்பது, கால்நடைகளுக்கு சரியான விகிதத்தில் உணவு (தீவனம்) அளிக்காததால் ஏற்படக்கூடிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும். அரிசி, கோதுமை, சோளம், குச்சிக்கிழங்கு மற்றும் அவற்றின் மாவு வகைகளை அதிகமாக அளித்தால், லாக்டிக் அமில உற்பத்தி அதிகமாகி, திடீரென இறப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. நோய் அறிகுறிகள் என்பது, அசை போடாத நிலை, பசியின்மை, வயிறு உப்

கோடை வெப்பத்தினால் தண்ணீர் சூடேறி இறக்கும் மீன்கள்

நாமக்கல், ஏப்.18 வெண்ணந்தூர் அருகே, ஏரி ஒன்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன. நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியம், மதியம்பட்டி ஊராட்சியில் திருமணிமுத்தாறு வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர், கல்கட்டானூர் ஏரியில் தேங்கி, சவுரிபாளையம் ஏரிக்கு செல்கிறது.  இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் கோடை காலத்திலும் தண்ணீர் நிற்கும். ஜிலேபி, கெண்டை வகை மீன்கள் வளர்கின்றன. இந்நிலையில், தற்போது கொளுத்தும் வெயிலால் கல்கட்டானூர் ஏரியில் தண்ணீர் வேகமாக குறைந்து வருவதுடன், விரைவில் சூடாகிறது.  இதனால், நேற்று முன்தினம் முதல், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே விரைந்து துப்புரவு பணியாளர்களை கொண்டு இறந்த மீன்களை கற்றி சுத்தம் செய்ய வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரும் 24 முதல் கீழ்பவானியில் தண்ணீர் நிறுத்தம்

ஈரோடு, ஏப்.18 வரும் 24 முதல், கீழ்பவானி வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்படுவது, முழுமையாக நிறுத்தப்படுகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர். பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி பாசனம், முதலாவது போகத்துக்கு ஜனவரி 21ல் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இரண்டாம் போகத்துக்கு பிப்ரவரி 1ல், அதை தொடர்ந்து பவானி ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. கோடை மழை பெய்யாத நிலையில், அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யவில்லை. இதனால், 100 முதல், 130 கன அடி என்ற அளவில் நீர் வரத்தாகிறது. அணையில் இருந்து கீழ்பவானியில், 2,300 கனஅடி, பவானி ஆற்றில், 1,300 முதல், 1,350 கனஅடி நீரை நீர் திறக்கப்படுகிறது. இதில்லாமல் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. அணை நீர்மட்டம் குறைந்து வருவதால், 30 நாட்களாக முறை வைத்து நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட குடிநீர் தேவைக்கு, இருப்பு வைக்க வேண்டி உள்ளது. இதனால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் வரும், 24ல் நீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்கு மட்டும், 10

வறட்சியால் மலை காய்கறி உற்பத்தி பாதிப்பு விவசாயிகள் கவலை

ஊட்டி, ஏப்.18 நீலகிரி மாவட்டத்தில் தொடரும் வறட்சியால், 30,000 ஏக்கரில் பயிரிட்ட மலை காய்கறிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரியில், 40,000 ஏக்கர் பரப்பளவில், மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ், சைனீஸ் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இந்த காய்கறிகளுக்கு கேரளா, கர்நாடகாவில் மவுசு அதிகம். ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகள் தினசரி லாரிகள் மூலம் ஊட்டி, மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டு, கார் போக விவசாயத்திற்காக தேனாடுகம்பை, ஆடா சோலா, அணிக்கொரை, கடநாடு மற்றும் எம்.பாலாடா, கொல்லிமலை ஓரநள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், பல ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறிகள் பயிரிட்டுள்ளது. நடப்பாண்டு கடும் வறட்சியால் மலை காய்கறி தோட்டங்கள் இடையே செல்லும் நீரோடைகளும் வற்றின. நுண்ணீர் பாசன திட்டம் சில பகுதிகளில் மட்டுமே கை கொடுத்து வருவதால், பெரும்பாலான இடங்களில் பயிரிட்ட மலை காய்கறிகள் தண்ணீரின்றி வற்றி, மழையை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடிக்கும் ப

பூங்கா பராமரிப்புக்கு இயற்கை கொடுத்த மழை

ஊட்டி, ஏப்.18 நீலகிரி மாவட்டம், பூங்கா புல்தரை பராமரிப்பு பணிக்கு கோடை மழை கை கொடுத்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டு, 123வது மலர் கண்காட்சி மே மாதம், 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. பூங்கா பொலிவுப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் ரசிக்க, 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மழை இல்லாததால் மலர்கள் வளர்ச்சி அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பூங்கா வளாகத்தில் உள்ள புல் தரை மைதானத்தை சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மைதானம் ஆங்காங்கே புற்கள் முளைக்காமல் பாதிக்கப்பட்டதால், பராமரிப்பு பணிக்காக புல்தரை மூடப்பட்டது.  காலை, மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சி வந்தாலும், மழை இல்லாததால் மைதானத்தில் புற்கள் வளர்ச்சி பெறாமல் உள்ளது. இந்நிலையில், நேற்று இயற்கையின் கொடையால், கோடை மழை பெய்தத பூங்காவின் புல்தரை, மலர் வளர்ச்சிக்கு ஓரளவு பயனுள்ளதாக அமைந்தது.

வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்குகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்?

புது தில்லி, ஏப்.18 ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் இயர்பட்ஸ்களுக்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் டிரெண்ட் ஆகி வருகிறது. சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ்க்கு போட்டியாக சொந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.  சில நிறுவனங்கள் ஏற்கனவே வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் சொந்தமாக இயர்பட்ஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ் சர்ஃபேஸ் பட்ஸ் என அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. புதிய இயர்பட்ஸ்களை மைக்ரோசாஃப்ட் மொரிசன் என்ற பெயரில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  முந்தைய சாதனங்களில் மைக்ரோசாஃப்ட் வானியல் சார்ந்த பெயர்களை சூட்டுவதை மைக்ரோசாஃப்ட் வாடிக்கையாக கொண்டிருந்தது. மைக்ரோசாஃப்ட் ஏற்கனவே ஆடியோ சாதனங்கள் சந்தையில் சர்ஃபேஸ் ஹெட்போன்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட்

ஆத்தூரில் ரூ.27 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

சேலம், ஏப்.17 சேலம் மாவட்டம், ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் 1600 மூட்டை பருத்தி ரூ.27 லட்சத்திற்கு விற்பனையானது.  ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம்தோறும் ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஏலத்தில் ஆத்தூர். நாமக்கல், பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.  நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் கோவை, ஈரோடு, சேலம், கும்பகோணம், புதுக்கோட்டை மற்றும் அன்னூர் பகுதியைச் சேர்ந்த மில் உரிமையாளர்கள் உள்ளிட்ட 20 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் ஆர்சிஹெச் ரகம் குவிண்டால் ரூ.4800 முதல் ரூ.6259 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ.6300 முதல் ரூ.7250 வரையிலும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆர்சிஹெச் ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.200 வரையிலும் விலை குறைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.  ஆக மொத்தம் 1600 மூட்டை பருத்தி ரூ.27 லட்சத்திற்கு விற்பனையானது.

ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்.22ம் தேதி அறிமுகம்

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 22-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிகிறது. ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ஸ்மார்ட்போன் வெளிவரும். ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. இந்த ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவும் உள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா,செயற்கை நுண்ணறி

வர்த்தக பற்றாக்குறை 176 பில்லியன் டாலராக உயர்வு மத்திய தொழிற்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2018 – 19 நிதி ஆண்டுக்கு 176 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  இந்தியாவின் ஏற்றுமதி வரலாற்றிலேயே, ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்புப் படி, 2018 – 19 நிதி ஆண்டில் தான் அதிகபட்சமாக 331 பில்லியன் டாலரை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். அதோடு இந்தியா முதல் முறையாக 300 பில்லியன் டாலர் மதிப்புக்கு மேல் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. 2018 – 19 நிதி ஆண்டில் இந்தியா மற்ற உலக நாடுகளுக்கு செய்த ஏற்றுமதியின் மொத்த அளவு 331 பில்லியன் டாலர். 2017 – 18 நிதி ஆண்டில் 303.52 பில்லியன் டாலர். ஏற்றுமதி எப்படி வேகமாக அதிகரித்திருக்கிறதோ அதே போல இறக்குமதியும் அதே வேகத்தில் அதிகரித்திருக்கிறது. 2018-19 நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த இறக்குமதி 507.44 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது.  கடந்த 2017 – 18 நிதி ஆண்டை விட 42 பில்லியன் டாலர் அதிகம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.